கொரோனா வைரஸால் பணமின்றி அழுத கேப் ட்ரைவர்... காஜல் அகர்வால் பகிர்ந்த எமோஷனல் சம்பவம்.
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வாக காஜல் அகர்வால் ஒரு எமோஷனல் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தெலுங்கு சினிமாவிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் இவர் நடித்த கோமாளி படமும் பெரிய ஹிட் அடித்தது. இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன்-2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவி வரும் வேளையில், காஜல் அகர்வால் அதுகுறித்த எமோஷனல் சம்பவம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'கடந்த 48 மணி நேரத்தில் நான் தான் அவரின் முதல் கஸ்டமர் என்று, இன்று ஒரு கேப் ட்ரைவர் என்னிடம் அழுதார். இன்றாவது மளிகை சாமான்கள் வாங்கிவிடலாம் என என் மனைவி எதிர்ப்பார்த்து காத்திருப்பாள். இந்த வைரஸ் நம்மை பல வகையில் தாக்கியுள்ளது. ஆனால் தின வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதனால் நான் அவருக்கு கூடுதலாக 500 ரூபாய் கொடுத்தேன். இதுபோல் நாம் அனைவரும் செய்ய வேண்டும். தனது கடைசி கஸ்டமருக்கு பிறகு அவர்70 மணி நேரம் யாரும் கிடைக்காமல் கார் ஓட்டியுள்ளார். அதனால் உங்கள் கேப் ட்ரைவர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே பணம் செலுத்துங்கள். நீங்களே அவர்களின் கடைசி கஸ்டமராக கூட இருக்கலாம்' என்ற பதிவை க்யோட் செய்து, இது மிகவும் மன வலியை தருகிறது என காஜல் பதிவிட்டுள்ளார்.