இதெல்லாம் 80, 90-ஸ் 'கிட்ஸ்க்கு' நல்லாவே தெரியும்... செம 'ஐடியா' கொடுத்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராகவும், நாடகத்தில் நடித்ததன் மூலமும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரியோ. பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

வீட்டில் சந்தோஷமாக இருங்கள் நடிகர் ரியோ | Be happy with family rio

தற்போது நாடெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்கும் பொருட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அதில் “உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க இது தான் சரியான தருணம். கவலைகளை மறந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். 80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும் எப்படி குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது என்று. எதிர்மறையான எண்ணங்களிலிருந்து தள்ளியே இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

Tags : Rio Raj