Nenjuku Needhi

“இது நல்லா சாப்புட்ற நேரம்…” நயன்தாராவ வெக்கப்பட்டு சிரிக்க வச்ச விக்னேஷ் சிவன்… viral video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவோடு இருக்கும் க்யூட்டான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Nayanthara vignesh shivan cute romantic viral video

Also Read | சமந்தா & விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’… படப்பிடிப்பில் விபத்தா?... படக்குழு அளித்த பதில்!

நயனதாராவின் வளர்ச்சி…

ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கிய நயன்தாரா அடுத்த சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, வல்லவன் மற்றும் கஜினி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவருக்கு ரி எண்ட்ரி படமாக ராஜாராணி படம் அமைந்தது. அதன் பின்னர் வரிசையாக ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Nayanthara vignesh shivan cute romantic viral video

விக்னேஷ் சிவனுடன் காதல்…

போடா போடி திரைப்படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் காதலர்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலமாக ராக்கி படத்தை வெளியிட்டுள்ளனர். அதுபோலவே கூழாங்கல் என்ற சர்வதேச விருதுகளைக் குவிக்கும் படத்தையும் வெளியிட உள்ளனர்.

Nayanthara vignesh shivan cute romantic viral video

ஆன்மீக சுற்றுலா…

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சமீப ஆண்டுகளில் அதிகளவில் ஆன்மிக தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். சமீபத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்ற இருவரும் அதையடுத்து நேற்று தஞ்சாவூர் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக விக்னேஷ் சிவன் “வாழ்வில் நல்ல விஷயங்கள் நடப்பதற்காக தெய்வ வழிபாடு” என்று தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் கூறி இருந்தார்.

Nayanthara vignesh shivan cute romantic viral video

Cute video…

இந்நிலையில் இப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவோடு இருக்கும் ஒரு க்யூட்டான வீடியோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு ஊட்டி விட அவர் சிரித்துக்கொண்டே சாப்பிடுகிறார். மேலும் அந்த வீடியோவில் “நல்லா சாப்பிடுவதற்கான நேரம். உண்மையான சந்தோஷமே நமக்கு பிடிச்ச சாப்பாட்ட பிடிச்சவங்களுக்கு ஊட்டிவிடுறதலான் இருக்கு” எனக் கூறியுள்ளார். விரைவில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காகதான் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read | ஐபிஎல் போட்டிக்கு நடுவே… ’வீட்ல விசேஷம்’ முக்கிய அப்டேட்… R J பாலாஜி கொடுத்த சர்ப்ரைஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara vignesh shivan cute romantic viral video

People looking for online information on Nayanthara, Nayanthara vignesh shivan latest Video, Vignesh shivan will find this news story useful.