பிரான்ஸ், தாய்லாந்து சுற்றுலாவுக்கு பின் நடிகை தமன்னாவின் LATEST போட்டோஷூட்! தீயாய் பரவும் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார்.

Tammannah Bhatia Latest Photoshoot Pictures goes viral

நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. 

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரிதேசுக்கு OTT-யில் முதல் அறிமுக திரைப்படமாகும். சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது.

Tammannah Bhatia Latest Photoshoot Pictures goes viral

சமீபத்தில் ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுத்தாளர் லுக் கோட்டின்கோ உடன் இணைந்து எழுதி பெங்குயின் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த புத்தகம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் நாள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.

Tammannah Bhatia Latest Photoshoot Pictures goes viral

மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்தில் நடிக்கிறார். சமீபத்திய கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் நடிகை தமன்னாவும் இடம்பெற்றுள்ளார். 

Tammannah Bhatia Latest Photoshoot Pictures goes viral

நடிகை தமன்னா பாட்டியா இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக பங்கெடுக்கிறார். கேன்ஸ் படவிழாவை முடித்துக்கொண்டு தாய்லாந்துக்கு சென்றார். அங்கும் சுற்றுலா சென்ற இடங்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குஜராத் பதிவெண் கொண்ட வாகனத்தின் முன் நின்று பிங்க் நிற உடையுடன் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Tammannah Bhatia Latest Photoshoot Pictures goes viral

People looking for online information on Tamanna, Tammanna, Tammannah bhatia will find this news story useful.