உலகக் கோப்பை கிரிக்கெட்டின் நேற்றைய (30.06.2019) நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் வெறும் 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பதிவு செய்த முதல் தோல்வியாகும்.
இந்த போட்டியில் வழக்கமான ஜெர்சிக்கு பதிலாக, ஆரஞ்சு வண்ணம் கொண்ட ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கியது. இது பெரிதும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் காலா படத்தில் சூப்பர் ரஜினிகாந்துடன் நடித்த ஹூமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில், ''மூட நம்பிக்கைக்காக இல்லை. ஆனால் அந்த பழைய நீல ஜெர்சிய கொண்டுவாங்க பிளீஸ் அது போதும்'' என்றார்.
Not superstitious at all .. but can we please have the Blue jersey back .. enough said 🤦🏻♀️
— Huma Qureshi (@humasqureshi) June 30, 2019