தனுஷ் நடிப்பில் தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆஃப் பகீர் திரைப்படம் தற்போது தமிழில் பக்கிரியாக ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனுஷ் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் அம்பயர் முடிவு குறித்து பேசினார். அப்போது, எனக்கு அது அம்பயரின் தவறான முடிவாக தோன்றியது. அதைத்தான் ட்வீட்டில் சொல்லியிருந்தேன். நான் அதைப் பற்றி இப்போது பேசினால் சர்ச்சை வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி இருக்கும். என்றார்.
தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
''அத பத்தி பேசணும்னா...'' - இந்த சர்ச்சை குறித்து தனுஷ் விளக்கம் வீடியோ