கார்த்தி - ஜோதிகா இணைந்து நடித்துள்ள 'தம்பி' பட பர்ஸ்ட் லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 15, 2019 05:43 PM
'பாபநாசம்’ படத்துக்கு பிறகு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்கு '96' பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடிப்பதாக கூறப்படுகிறது. வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளன.
இந்த படத்துக்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘தம்பி’ என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர்.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.