பாலிவுட்டில் நடிகை வேதிகா அறிமுகமாகும் த்ரில்லர் படத்தின் ரிலீஸ் தேதி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 09, 2019 11:05 AM
‘முனி’ சீரிஸின் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை வேதிகா பாலிவுட்டில் அறிமுகமாகும் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மறும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை வேதிகா தற்போது முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் "The Body" திரைப்படத்தில் நடிகர் இம்ரான் ஹஸ்மி, ரிஷி கபூர், நடிகை ஷோபிதா துலிபாலா, வேதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை அஸூர் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், "The Body" திரைப்படம் வரும் டிச.13ம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிணவறையில் இருந்து காணாமல் போன சடலத்தை தேடுவது தொடர்பான போலீஸ் விசாரணை பற்றிய இப்படம் ஸ்பானிஷ் படமான ‘எல் க்யூர்போ’ என்ற த்ரில்லர் படத்தை தழுவி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.