ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி' படம் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜூ முருகன். இவர் தற்போது 'ஜிப்ஸி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.

Jiiva and Raju Murugan's Gypsy will release on Jan 24

மேலும், இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த  படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு சென்சாரில் A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.