ஹரிஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’ சென்சார் ரிப்போர்ட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 02, 2019 04:05 PM
சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் சார்பாக கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் , யோகி பாபு, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். குபேந்திரன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
Tags : Dhanusu Raasi Neyargale, Harish Kalyan