ஜெயம் ரவி படம் ஷூட்... தல அஜித் Birthdayக்கு ஃபேன்ஸ்க்கு ஸ்பெஷல் டிரீட்டா?
முகப்பு > சினிமா செய்திகள்ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி 3வது முறையாக இயக்குநர் லக்ஷ்மணுடன் இணையும் படம் ’பூமி’. விவசாயிகளில் வாழ்வை மையப்படுத்திய இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கி உள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 1ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : Bhoomi, Jayam Ravi, Ajith Kumar