மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' - ஷூட்டிங்கிற்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்
முகப்பு > சினிமா செய்திகள்கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், லால், ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ரவி வர்மன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை பகிர்ந்துள்ளார்.
Tags : Ponniyin Selvan, Mani Ratnam, Trisha, AR Rahman, Karthi