மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' - விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் ஒரு Change !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 12, 2020 12:16 AM
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டைட்டில் லுக் நியூ இயரை முன்னிட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, லால், ஜெயராம், ஐஸ்வின் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுடைந்துள்ளதால் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பியுள்ளனராம்.