இந்த படத்திற்காக இணைந்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Maniratnam Ponniyin Selvan casting Vikram Jayam Ravi Karthi

தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவிருப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் மீண்டும் தனது குரு மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார். 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, நடிகை நயன்தாரா, நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் ஆகியோர் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளன.

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு நடிகர் குமாரவேல் திரைக்கதை எழுதி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ‘பொன்னியன் செல்வன்’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.