www.garudabazaar.com

ஜெயம் ரவியின் 31வது படம்.. டைட்டிலுடன் வெளியான மோஷன் போஸ்டர்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Jayam Ravi JR31 Siren Movie Motion Poster Released

Also Read | கேங்ஸ்டர் லுக்கில் சிம்பு.. ரிலீஸ் தேதியுடன் 'வெந்து தணிந்தது காடு' புதிய அதிரடி போஸ்டர்!

அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi JR31 Siren Movie Motion Poster Released

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில், ஜெயம் ரவியுடன் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர்.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi JR31 Siren Movie Motion Poster Released

அடுத்ததாக ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் ஜெயம் ரவி தனது 30வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'சைரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi JR31 Siren Movie Motion Poster Released

அறிமுக இயக்குனர் ஆண்டனி  இயக்கத்தில், ஜெயம் ரவியின் 31வது படமாக இந்த படம் உருவாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். யோகி பாபு காமெடியனாக இந்த படத்தில் நடிக்கிறார். செல்வக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராக பணிபுரிகிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை இயக்குகிறார்‌

ஜெயம் ரவியின் அத்தை சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

Also Read | "இமயமலையில் என் கொடி பறந்தால்".. நடிகர் அஜித்தின் பைக் RIDE.. மாஸ் தெறிக்கும் PHOTOS

ஜெயம் ரவியின் 31வது படம்.. டைட்டிலுடன் வெளியான மோஷன் போஸ்டர்! முழு விவரம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi JR31 Siren Movie Motion Poster Released

People looking for online information on GV Prakash Kumar, Jayam Ravi, Jayam Ravi JR31, Jayam Ravi JR31 Siren Movie, Keerthy Suresh, Siren Movie will find this news story useful.