www.garudabazaar.com

Hrithik Roshan: ரசிகர் காலில் விழுந்த ஹிருத்திக் ரோஷன்.. ‘எதனால இப்படி பண்ணாரு?’ - வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகருடைய காலில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் விழுந்த விஷயம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

Hrithik Roshan touching his fan feet viral Video ஹிருத்திக் ரோஷன்

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல அக்கட தேசத்து நடிகை! அவரே கொடுத்த அப்டேட்

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஒரு விஷயம் வித்தியாசமாக இருந்தாலும், சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், குறிப்பாக நடிகர்கள் எதை செய்தாலும் அவை தொடர்பான வீடியோக்களும் பகிர்வுகளும் மிக விரைவாக வலம் வர தொடங்கிவிடும். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் காலில் ரசிகர் ஒருவர் விழுந்திருக்கிறார். இதை தொடர்ந்து அந்த இடத்திலேயே திரும்பவும் அந்த ரசிகரின் காலில் ஹிருத்திக்கும் விழுந்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hrithik Roshan touching his fan feet viral Video ஹிருத்திக் ரோஷன்

கடந்த 2017 ஆம் ஆண்டு புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் நேரடியாக வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற கமர்சியல் திரைப்படமாக தமிழில் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். தமிழில் இந்த திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தான் இந்த திரைப்படத்தை ஹிந்திலும் இயக்குகின்றனர்.

Hrithik Roshan touching his fan feet viral Video ஹிருத்திக் ரோஷன்

ஹிந்தியில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன், மாதவன் கேரக்டரில் சையத் அலிகான் நடித்திருக்கின்றனர். தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த அந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் ராதிகா ஆப்தே நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரை பார்த்து ரசிகர்கள் மிக நீண்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாக குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு இந்த திரைப்படம் வரவிருக்கிறது.

Hrithik Roshan touching his fan feet viral Video ஹிருத்திக் ரோஷன்

இதனிடையே ஹிருத்திக் அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் சந்தித்து பேசினார். அப்போது திடீரென்று சற்றும் எதிர்பாராத வகையில் ரசிகர் ஒருவர் ஹிருதிக்கை வந்து சந்தித்து அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே நிமிடம் அந்த ரசிகர் டக்கென ஹிருத்திக் ரோஷன் காலில் விழுந்துவிட்டார். உடனே பதறியை ஹிருத்திக் ரோஷன், பதிலுக்கு பணிவுடன் மீண்டும் திரும்பி அந்த ரசிகரின் காலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்து விட்டனர்.

இவ்வளவு பெரிய நடிகர் ரசிகரின் காலில் விழுந்து விட்டாரே.. என்று இது குறித்த வீடியோவுடன் ரசிகர்கள் பகிர்ந்து இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர், “பல நடிகர்கள் இப்படி ரசிகர்கள் தங்கள் காலில் விழுவதை விரும்ப மாட்டார்கள்..  ரசிகர்ளுக்கு உரிய சுயமரியாதையை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் யாரும் யார் காலிலும் விழ வேண்டியது இல்லை என்கிற நிலைப்பாட்டில் பல நடிகர்கள் உள்ளனர். அதை மீறி அந்த ரசிகர் உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்து விட்டதால், அவருக்கு உண்டான மரியாதையை திருப்பி தரும் வகையில் மீண்டும் அவருடைய காலில் ஹிருதிக் விழுந்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | முன்னாள் CM மகனுடன் ‍தமன்னா நடிக்கும் புதிய படம்.. ‌பக்காவான டீசருடன் வெளியான ரிலீஸ் தேதி!

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan touching his fan feet viral Video ஹிருத்திக் ரோஷன்

People looking for online information on Hrithik Roshan, Hrithik Roshan touches fans feet, Viral video will find this news story useful.