www.garudabazaar.com

"என்னோட ஏஞ்சல் பாய்".. செல்ல நாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை நஸ்ரியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நஸ்ரியா, தனது செல்ல நாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

Images are subject to © copyright to their respective owners.

Also Read | AK62-க்கு பின் அஜித்தின் பைக் சுற்றுப்பயணம்.. மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வைரல் தகவல்!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013 ஆம் ஆண்டு வெளியான 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா நசீம்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏற்கனவே கேரளா முழுவதும் அறியப்பட்டவர் தான் நஸ்ரியா. தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

Images are subject to © copyright to their respective owners.

நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

Images are subject to © copyright to their respective owners.

இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது. சமீபத்தில் நானியுடன் அடடே சுந்தரா (Ante Sundaraniki) படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தமது   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு நஸ்ரியா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

Images are subject to © copyright to their respective owners.

அதில், " என் சிறிய இதயத்துடிப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.... கடந்த எட்டு வருடங்களில் என் இதயம் மகிழ்ச்சியாக இருந்தது.

நீ தூய அன்புடையவன், நீ எங்களைத் தேர்ந்தெடுத்தது எங்கள் அதிர்ஷ்டம்!

எங்கள் சூரிய ஒளி

நீ. எங்கள் வீட்டை நீ மகிழ்ச்சியான இடமாக மாற்றியுள்ளாய்...

நீ ஒரு நல்ல பையன் …என் ஏஞ்சல் பாய்! 🐶

கடைசி மூச்சு என் உடலையோ அல்லது உன்னுடைய உடலையோ விட்டு வெளியேறும் வரை ஒன்றாக இருப்போம்! நான் சத்தியம் செய்கிறேன்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் லிட்டில் ஓரியோ!" என நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.

Also Read | The Legend : "தி லெஜண்ட் திரைப்படத்திலும் விழிப்புணர்வு மெசேஜ்..".. கலங்கவைத்த மறைந்த நடிகர் விவேக்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nazim Fahadh Celebrating Her Dog Birthday with family

People looking for online information on Fahadh Faasil, Nazriya nazim will find this news story useful.