www.garudabazaar.com

பிரபல ஓடிடியில் RJ பாலாஜி & ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ரன் பேபி ரன்’ .. வெளியான ரிலீஸ் தேதி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை (மார்ச் 06, 2023):  டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளம், அடுத்த அதிரடி வெளியீடாக, ஒரு சீட் எட்ஜ் திரில்லரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.

RJ Balaji Aishwarya Rajesh Run Baby Run Disney Plus Hotstar

Images are subject to © copyright to their respective owners.

Also Read | The Legend : "தி லெஜண்ட் திரைப்படத்திலும் விழிப்புணர்வு மெசேஜ்..".. கலங்கவைத்த மறைந்த நடிகர் விவேக்..!

நடிகர்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் 'ரன் பேபி ரன்' திரைப்படம், மார்ச் 10, 2023 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் உருவான இப்படத்தில், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஜோ மல்லூரி, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, KPY பாலா, ஜார்ஜ் மரியன், நாகிநீடு முதலிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஒரு புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சோஃபி என்ற மருத்துவக்கல்லூரி மாணவியின் மரணத்திலிருந்து இக்கதை தொடங்குகிறது இந்த கதை. அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவி தாரா உயிருக்குப் பயந்து தப்பியோடுகிறார். தப்பி ஓடும் வழியில் தாரா, ஒரு காரின் பின் இருக்கையில் தஞ்சம் அடைகிறாள்.

RJ Balaji Aishwarya Rajesh Run Baby Run Disney Plus Hotstar

Images are subject to © copyright to their respective owners.

அந்தக் காரை வைத்திருக்கும் சத்யா ஆரம்பத்தில் தாராவிற்கு உதவ மறுத்துவிட்டாலும் பின்னர் அவளை அவனது வீட்டில் இரண்டு மணி நேரம் தங்க அனுமதிக்கிறான். தாரா யார், அவள் உயிருக்கு ஏன் ஆபத்து? சத்யாவைத் தாரா சந்திக்கும் நிகழ்வு,  அவனது வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது? அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'ரன் பேபி ரன்'.

'ரன் பேபி ரன்' படத்திற்கு S யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மண் குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

Also Read | KUSHBOO : தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குஷ்பு .. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Aishwarya Rajesh Run Baby Run Disney Plus Hotstar

People looking for online information on Aishwarya Rajesh, Disney Plus Hotstar, RJ Balaji, Run Baby Run will find this news story useful.