Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

ஹனிமூனில் விஜய் டிவி புகழ் & பென்ஸி.. இந்த குளிர் பிரதேசத்துக்கா போயிருக்காங்க? சூப்பர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

Vijay TV Pugazh Bensi Honeymoon in Ooty Hills

Also Read | VIDEO: அடேங்கப்பா..சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு! சும்மா ஜொலிக்குதே

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை படங்களில் நடித்துள்ளார்.

Vijay TV Pugazh Bensi Honeymoon in Ooty Hills

முன்னதாக 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.  இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார்.

Vijay TV Pugazh Bensi Honeymoon in Ooty Hills

இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது மனைவியுடன் புகழ், தேனிலவுக்கு ஊட்டி சென்றுள்ளார். ஊட்டியில் இருந்து மனைவியுடன் ஊர் சுற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Also Read | 19 வகை உணவுகளுடன் விருந்து.. அசந்து போன பூஜா ஹெக்டே! அம்மா ஸ்பெஷல்னா சும்மாவா

ஹனிமூனில் விஜய் டிவி புகழ் & பென்ஸி.. இந்த குளிர் பிரதேசத்துக்கா போயிருக்காங்க? சூப்பர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Pugazh Bensi Honeymoon in Ooty Hills

People looking for online information on Ooty Hills, Pugazh Bensi Honeymoon, Vijay Tv Pugazh will find this news story useful.