www.garudabazaar.com

ரிலீசான காத்துவாக்குல ரெண்டு காதல்.. படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்துக்கள் ஒரு பார்வை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Kaathu Vakkula Rendu Kaadhal Movie Fans Review

Also Read | போடு! KRK ரிலீஸ்.. திருப்பதியில் நயன்தாரா - விக்கி தரிசனம்.. அவரே வெளியிட்ட ஃபோட்டோ..!

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இன்று ஏப்ரல் 28 இந்த படம் ரிலீஸாகி உள்ளது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaathu Vakkula Rendu Kaadhal Movie Fans Review

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அதிகாலை 4 மணி ஸ்பெஷல் காட்சிகள் இந்த படத்திற்கு போடப்பட்டன. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Kaathu Vakkula Rendu Kaadhal Movie Fans Review

சில ரசிகர்கள் சமந்தாவுக்காக படம் பார்க்க வந்ததாக கூறினர். இன்று நடிகை சம்ந்தாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் பேட்ச் குத்தி ஒரு ரசிகர் படம் பார்க்க வந்தது வைரலானது. மேலும் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மூவரும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறினர். சிலர் அனிருத் இசையை புகழ்ந்தும் பேசினர். முதல் பாதியின் கடைசி 30 நிமிடங்கள் சிறப்பாக இருந்ததாகவும் கூறினர். சில ரசிகர்கள் படம் Feel Good ஆக இருப்பதாகவும், 2-3 முறை பார்க்க கூடியதாக இருப்பதாகவும் கூறினர்.

Kaathu Vakkula Rendu Kaadhal Movie Fans Review

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ரிலீசான காத்துவாக்குல ரெண்டு காதல்.. படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்துக்கள் ஒரு பார்வை வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vakkula Rendu Kaadhal Movie Fans Review

People looking for online information on Kathu vaakkula rendu kadhal, KRK movie, KRK Movie Fans review, KRK Movie Release, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.