www.garudabazaar.com

The wait is over… ’160 மொழிகளில் அவதார் 2’… ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவதார் 2 படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Avatar 2 reportedly may release in 160 languages

Also Read | KGF நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்…. சர்ப்ரைஸ் Update– கொண்டாடும் ரசிகர்கள்!

13 ஆண்டு காத்திருப்பு…

2009 ஆம் ஆண்டு ’டைட்டானிக்’ பட புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார். இந்த படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் இமாலய வெற்றியால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Avatar 2 reportedly may release in 160 languages

அவதார் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்

அவதார் படம்தான் உலகில் அதிக வசூல் செய்த படம் (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற சாதனையைப் படைத்திருந்தது. அதற்கு முன்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் அந்த சாதனையை படைத்திருந்தது. அவதார் படத்தின் வசூல் சாதனையை சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம்தான் முறியடித்தது. இந்நிலையில் உருவாகி வரும் அவதார் அடுத்தடுத்த பாகங்களுக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2020 ஆம்  வருடத்தில் அவதார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.  மேலும், அவதார் 2, 2021ம் ஆண்டு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரனமாக 2022ம் ஆண்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளிவந்தது.

Avatar 2 reportedly may release in 160 languages

அவதார் 2 ரிலீஸ்…

இதையடுத்து படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த செய்தி உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவதார் 2 திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ உலகின் மிகப்பெரிய திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பான, தற்போது நடந்துவரும் CInemacon நிகழ்ச்சியில் திரையிடப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு தற்போது உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Avatar 2 reportedly may release in 160 languages

அடுத்தடுத்த பாகங்கள்…

இந்த படத்தின் டிரைலர் வரும் மே 6 அன்று வெளியாகவுள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தோடு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவதார் முதல் பாகம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு வருட இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

THE WAIT IS OVER… ’160 மொழிகளில் அவதார் 2’… ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்! வீடியோ

Avatar 2 reportedly may release in 160 languages

People looking for online information on Avatar 2, Avatar 2 release in 160 Languages, Avatar 2 Updates will find this news story useful.