Veetla Vishesham Others Page USA

பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் BIOPIC படம்... வேறலெவலில் தயாரான அனுஷ்கா சர்மா! சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றில் அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளார்.

Anushka Sharma Chakda Express Movie Shooting Started

Also Read | வரிக்குதிரை உடையில் பிரியங்கா மோகன் வித்தியாசமான போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் PHOTOS

சக்தா எக்ஸ்பிரஸ், 2012 இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனையான ஜூலனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு 'சக்தா எக்ஸ்பிரஸ்' படப்பிடிப்பை அனுஷ்கா சர்மா தொடங்கினார்; இதற்காக நடிகை அனுஷ்கா ஷர்மா பல மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்து படப்பிடிப்பைத் தொடங்கினார். ஷாருக்கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்த 2018 ஆம் ஆண்டு ஜீரோ திரைப்படத்திற்குப் பிறகு இது அவரது முதல் திரைப்படமாகும்.

ஞாயிற்றுக்கிழமை, அனுஷ்கா இன்ஸ்டாகிராமில், பட செட்டில் இருந்து BTS காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார். அனுஷ்காவின் பதிவின் கருத்துகள் பிரிவில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது கணவர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொடர்ச்சியான இதய ஈமோஜிகளை பதிவிட்டார். நடிகர் ரன்வீர் சிங் மற்றும் கிரிக்கெட் வீரர் ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் கருத்து பிரிவில் பதிவிட்டனர்.

Anushka Sharma Chakda Express Movie Shooting Started

சக்தா ‘எக்ஸ்பிரஸ், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, நெட்ஃபிக்ஸ் OTT-யில் பிரத்யேகமாக ரிலீஸ் செய்யப்படுகிறது.

Anushka Sharma Chakda Express Movie Shooting Started

அனுஷ்கா சர்மா ஜனவரி 2022 இல் சக்தா எக்ஸ்பிரஸ் படத்தை அறிவித்தார். அனுஷ்கா சர்மா மற்றும் கர்ணேஷ் சர்மா கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சக்தா எக்ஸ்பிரஸ் படத்தை ப்ரோசித் ராய் இயக்க உள்ளார்.

Anushka Sharma Chakda Express Movie Shooting Started

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி & பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு வாமிகா என்ற மகள் இருக்கிறார்.

Also Read | விக்னேஷ் சிவன் - நயன்தாரா கல்யாணத்தை முழுக்க நடத்துனதே இவங்க தானா? வைரலாகும் பதிவு

தொடர்புடைய இணைப்புகள்

Anushka Sharma Chakda Express Movie Shooting Started

People looking for online information on Anushka sharma, அனுஷ்கா சர்மா, Chakda Express Movie, Chakda Express Movie updates will find this news story useful.