Veetla Vishesham Others Page USA

விக்னேஷ் சிவன் - நயன்தாரா கல்யாணத்தை முழுக்க நடத்துனதே இவங்க தானா? வைரலாகும் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்திய நிறுவனம் குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Vignesh Shivan Instagram Post about Shaadi Squad Team

Also Read | வரிக்குதிரை உடையில் பிரியங்கா மோகன் வித்தியாசமான போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் PHOTOS

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது. அங்குள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தை பிரபல நிகழ்வு மேலாண்மை நிறுவனமான ஷாதி ஸ்குவாட் நிறுவனம் நடத்தி உள்ளது. இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள பதிவில், "எங்கள் திருமணத்திற்காக நீங்கள் ஒன்றிணைத்த  கனவு போன்ற, மறக்கமுடியாத, அதிசயமான தருணங்களுக்கு மிக்க நன்றி! :) டினா, அனிஷா & குழு! நீங்கள், எங்கள் அனைவருக்கும் மிகவும் இனிமையாக இருந்தீர்கள்!

Vignesh Shivan Instagram Post about Shaadi Squad Team

கடைசி நிமிடம் திட்ட மாற்றங்கள், கடைசி நிமிட திருப்பங்களை உங்கள் அணியினர் சிறப்பாக கையாண்டு இந்த சிறப்பு மிக்க நாளை நிறைவாக்கினீர்.

மிக்க நன்றி மற்றும் உங்களின் அனைத்து  திருமணங்களுக்கும் என்னை அழைக்க மறக்காதீர்கள்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Vignesh Shivan Instagram Post about Shaadi Squad Team

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்தும் வழங்கப்பட்டது.

திருமணத்திற்கு பின் அடுத்த நாள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.  பின் கேரளாவில் உள்ள  செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக  சாமி தரிசனம் செய்தனர்.  இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

Vignesh Shivan Instagram Post about Shaadi Squad Team

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த பின் முதல்முறையாக வெளிநாட்டிற்கு  சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் & போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Also Read | போடு வெடிய..தமிழில் ரிலீஸாகும் தேசிய விருது வென்ற 'ஜல்லிக்கட்டு'.. பிரபல OTT-யில் எப்போ ரிலீஸ்?

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Instagram Post about Shaadi Squad Team

People looking for online information on Nayanthara, Shaadi Squad Team, Vignesh shivan, Vignesh Shivan Instagram Post will find this news story useful.