இன்னும் பெரிதாகும் கமல்ஹாசனின் மல்டி ஸ்டாரர் - ‘இந்தியன் 2’-ல் இணைந்த பிரபல TV Host!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 05, 2019 10:58 AM
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நள்ளிரவில் சென்னை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில், நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக் உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில், தற்போது பிரபல டிவி தொகுப்பாளரும், நடிகருமான ஜெகன் படத்தில் இணைந்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு வேளையில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.