கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2'வில் நடிக்கிறாரா இந்த பாலிவுட் ஹீரோ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 07:46 PM
'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக இயக்குநர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யூத் ஜாம்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் முதன் முறையாக நடிகர் விவேக் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார்.
இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் சென்னை வந்துள்ளார். அப்போது இயக்குநர் ஷங்கரை சந்தித்து பேசியுள்ளார்.
இருவரும் சந்தித்து பேசும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அனில் கபூர் 'இந்தியன் 2'வில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. எங்கள் தரப்பில் விசாரித்த போது அந்த செய்திகள் பொய்யானவை என தெரியவந்துள்ளது.