Official: சூப்பர் ஸ்டாருடன் மோதும் அகில உலக சூப்பர் ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பில் பி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

It's official Agila Ulaga superstar Shiva's Sumo releasing on Pongal 2020

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விளையாட்டு சம்மந்தமாக உருவாகி வரும் ‘சுமோ’ திரைப்படத்தில் சிவா நடித்துள்ளார். ‘பிப்ரவரி 14’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி.ஹொசிமன் இயக்கியுள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பின் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோருடன் நிஜ சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோ என்பவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தோ-ஜப்பானிஸ் சார்ந்த சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமான ‘சுமோ’ திரைப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் சிவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.