www.garudabazaar.com

பிரபல நடிகை தீபா பவுலின் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு காரணம் இது தானா? வெளிவந்த தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தீபா என்கிற பவுலின் உயிரை மாய்த்துக் கொண்ட காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Is this reason for Actress Deepa Powlen Sad decision

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிக்கா என்கிற தீபா, இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில்  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Is this reason for Actress Deepa Powlen Sad decision

சமீபத்தில் வெளியான வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.  மேலும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் இவருக்கு 100K பாலோவர்ஸ் உள்ளனர்.  கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரீல் வீடியோ பதிவேற்றி உள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அது மட்டும் இன்றி அந்த கடிதத்தில் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் அந்த காதல் கைக்கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என கூறப்படுகிறது.

உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Is this reason for Actress Deepa Powlen Sad decision

People looking for online information on Deepa, Powlen Jessica will find this news story useful.