www.garudabazaar.com

"அப்டி போடு!!".. காதலரை திருமணம் செய்துகொண்ட தமிழ் சீரியல் நடிகை!.. எந்த சீரியல் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டி.வியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் நாயகி.

Nayagi serial actress Pradeepa marriage viral pics சீரியல் நடிகை

வித்யா பிரதீப் நடித்து வந்த சீரியலில் அதன் பிறகு மொத்த கதையும், கேரக்டர்களும் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகத் தொடங்கியது. அதற்கும் முன்னதாக இந்த சீரியலில் நடிகை விஜயலெட்சுமி முதலில் கதாநாயகியாக நடித்தார். 

இந்த தொடரில் வித்யா பிரதீப் நடித்து வந்தபோது, நாயகன் திருவுக்கு தங்கையாக அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் பிரதீபா.

இவர் தனக்கே உண்டான இயல்பான நடிப்பாலும், வில்லி கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான ரியாக்‌ஷன்களாலும்  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். எனினும் இந்த சீரியலுக்கு பிறகு அவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில்தான், இவருக்கு தற்போது கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில், நெருங்கிய உறவினர்கள் மத்தியில், இவர் தமது தனது காதலரை கரம் பிடித்துள்ளார்.

பிரதீபாவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அதிர்ச்சி!!! சூரி வீட்டார் திருமணத்தில் 10 சவரன் நகை கொள்ளையா?.. நடந்தது என்ன? Exclusive தகவல்கள்!

தொடர்புடைய செய்திகள்

Nayagi serial actress Pradeepa marriage viral pics சீரியல் நடிகை

People looking for online information on Nayagi, Pradeepa, SerialActress, TVActress will find this news story useful.