www.garudabazaar.com

'குக் வித் கோமாளி செட்டில் Mr & Mrs சின்னத்திரை?'.. மா.கா.பாவை கலாய்த்த தீபா அக்கா.. வைரல் Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகியது.

MrMrs Chinnathirai promo Cook With Comali Set Deepa Akka

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கிராண்ட் பினாலே அண்மையில் நடந்தது. இதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கனி டைட்டில் கார்டு வென்றார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் அடுத்த சென்சேஷனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது. அதுதான் Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கினர்.

Mr & Mrs சின்னத்திரை சீசன் 3-ல் தீபா தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டார். இந்த காம்போ ஒரு கலகலப்பான காம்போவாக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனுடைய அடுத்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சின்னத்திரை செட்டில் நடந்த இந்த நிகழ்ச்சி இப்போது குக் வித் கோமாளி செட்டில் நடந்திருக்கிறது. சிறந்த சமையல் செய்யும் சின்னத்திரை தம்பதியை தேர்ந்தெடுக்கும் விதமாக குக் வித் கோமாளி செட்டில் வைத்து இந்த நிகழ்ச்சியின் இந்த எபிசோட் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

இதில் விஜய் டிவி நட்சத்திரமும், பல சினிமாக்களில் நடித்தவருமான தீபா அக்கா காமெடிக்கு பஞ்சம் என்கிற ரீதியில் கலகலவென பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தீபாவின் கணவர் எப்போதும் வீட்டில் தானே சமைப்பதாகவும், அதனால் இந்த முறை தீபா சமைக்க வேண்டும் என்றும் கோரினார். இதனைத் தொடர்ந்து தீபா சமையலில் களமிறங்கினார். அப்போது வந்த தீபாவை இடையூறு செய்த மாகாபா ஆனந்திடம், “நீங்கள் எங்களைப் போல் வேலையா செய்றீங்க?.. சும்மா தானே இருக்கீங்க?” என்று கலாய்த்து விடுகிறார். இப்படி இன்னும் பல Fun-களுடன் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ALSO READ: ரைசா முகம் வீங்கியது ஏன்? ஆல்கஹால்..Smoking பண்ணக்கூடாது? மருத்துவர் பைரவி பரபரப்பு பேட்டி!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

MrMrs Chinnathirai promo Cook With Comali Set Deepa Akka

People looking for online information on CookWithComali, DeepaAkka, MrMrsChinnathirai, Promo, Tamil TV show, Trending, VijayTelevision, Vijaytv, Viral will find this news story useful.