அதிர்ச்சியில் திரையுலகம்.! சென்னையில் இளம் தமிழ் நடிகை எடுத்த சோக முடிவு!!..
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகை தீபா பவுலின் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மஹிவர்மன் இயக்கத்தில் 'வாய்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின். 29 வயதான ஆந்திராவை சார்ந்த இவர் துப்பறிவாளன் படத்திலும் துணை நடிகையாக நடித்தவர்.
இந்நிலையில் இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இவர் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் தீபா உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவரது மறைவுக்கு நண்பர்கள் மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.