பிரபல இளம் ஹீரோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது ! குவியும் வாழ்த்து !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வித்தியாசமான வேடங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ச்சியாக கவர்ந்து வருபவர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷுடன் 'மாரி 2' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமாகியுள்ளார்.

Popular hero blessed with boy baby ft Tovino Thomas | பிரபல ஹீரோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

டோவினோ தனது காதலி லிடியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷா என்று பெயரிட்டதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் டோவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😇

A post shared by Tovino Thomas (@tovinothomas) on

மேலும் செய்திகள்

Popular hero blessed with boy baby ft Tovino Thomas | பிரபல ஹீரோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

People looking for online information on Tovino Thomas will find this news story useful.