Pattamboochi

தள்ளி வைக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ ரிலீஸ்… நடிகர் பார்த்திபன் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Iravin Nizhal movie new release update by parthiban

இரவின் நிழல்

தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த வித்தியாச முயற்சியாக ஒரே ஷாட்டில் உருவாகும் படமாக ’இரவின் நிழல்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்துக்காக ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான முறையில் ப்ரமொஷன்களை செய்துவந்தார் பார்த்திபன்.

வெளியீட்டுக்கு முன்பே அங்கீகாரம்

உலகளவில் இந்த மாதிரி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன. அதிலும் ‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படமாக உருவாகியுள்ளது. இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளன.

Iravin Nizhal movie new release update by parthiban

புது ரிலீஸ் அப்டேட்

தமிழகத்தில் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு படத்தை வெளியிடுகிறார். ஜூன் 24 ஆம் தேதி (இன்று) இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக முன்னர் படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் இன்று திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஜூலை மாதத்தில் ரிலீஸாகும் என புதிய அப்டேட்டை நடிகரும் படத்தின் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

Iravin Nizhal movie new release update by parthiban

தொடர்புடைய இணைப்புகள்

Iravin Nizhal movie new release update by parthiban

People looking for online information on A R Rahman, Iravin nizhal, Parthiban will find this news story useful.