Nenjuku Needhi

"ஒரு பாட்டுக்கு tune பண்றேன்னு…"… ARR குறித்து பார்த்திபன் எமோஷனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் ஜுன் 24 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

Parthiban emotional Tweet for A R Rahman and Iravin nizhal

Also Read | Breaking: போடு! மலையாள Bigg Boss-ல் மோகன்லாலுடன் கமல்… surprise தகவல்

இரவின் நிழல்…

தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய  திரைப்படங்கள் பரவலாகக் கவனத்தைப் பெற்றன. ஒத்த செருப்பு படம் முழுவதும் அவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இப்போது அவர் அடுத்த வித்தியாச முயற்சியாக ஒரே ஷாட்டில் உருவாகும் படமாக ’இரவின் நிழல்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தைக் காண ஆவலாக உள்ளனர். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டது கவனத்தைப் பெற்றது.

Parthiban emotional Tweet for A R Rahman and Iravin nizhal

முதல் நான் லீனியர் single shot படம் …

உலகளவில் இந்த மாதிரி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன. அதிலும் ‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படமாக உருவாகியுள்ளது. இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளன.

Parthiban emotional Tweet for A R Rahman and Iravin nizhal

ரிலீஸ்….

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான மாயவா தூயவா எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி வரிகளில், ரஹ்மான் இசையில், ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் 5 ஆம் தேதி நடக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 24 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக  போஸ்டருடன் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Parthiban emotional Tweet for A R Rahman and Iravin nizhal

பாட்டுக்கு Tune பண்ண…

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த டிரைலரை படத்துக்கு இசையமைத்துள்ள A R ரஹ்மான் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த டிவீட்டைப் பகிர்ந்துள்ள நடிகர், இயக்குனர் பார்த்திபன் “ஒரே ஒரு பாட்டுக்கு tune பண்றேன்னு நீங்க பாட்டுக்கு படத்தையே நல்படைப்பாய் tune பண்ணி,உங்கள் dedication கண்டு கலங்கி நிற்கும் நான் இந்த tweet-க்கு பின் என்ன எழுத?” என நெகிழ்ச்சியாக டிவீட் செய்துள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Also Read | Breaking: விஜய் சேதுபதிக்கு Farewell … PAN இந்தியா ரிலீஸ்… ‘விடுதலை’ பற்றி வெளியான Exclusive தகவல்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban emotional Tweet for A R Rahman and Iravin nizhal

People looking for online information on AR Rahman, Iravin Nizhal Movie, Iravin Nizhal Movie Release updates, Parthiban Tweet, R parthiban will find this news story useful.