ஊரெல்லாம் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பத்தி பேச, ஒருத்தர் மட்டும் 'பிகில்' ஃபோட்டோ போட்டார்
முகப்பு > சினிமா செய்திகள்'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 15) சென்னை லீலா பேலஸ் என்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. மேலும் விழாவில் நடைபெற்றவை குறித்து தான் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. அந்த அளவுக்கு பெரும்பாலானோரின் கவனம் அந்த நிகழ்ச்சியின் மீது இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி அன்பு, மதம் உள்ளிட்டவை குறித்து பேசியது, தல அஜித் பற்றி தளபதி விஜய் குறிப்பிட்டது, விஜய் சேதுபதிக்கு விஜய் திருப்பி கொடுத்த முத்தம் உள்ளிட்ட நிகழ்வுகள் விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.
எங்கு பார்த்தாலும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேச்சு தான் காணப்படுகிறது. இதற்கிடையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது பிகில் பட லுக்கை ட்விட்டரில் பகிர்ந்து 1 வருடத்துக்கு முன் 'பிகில்' எனப் பதிவிட்டுள்ளார்.