விஜய்-அஜித் பட நடிகைக்கு 'திருமணம்'... தொழிலதிபரை மணந்தார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்களில் தங்கையாக நடித்தவர் ஷீலா கவுர். குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் அதன்பிறகு ஹீரோயினாக இளவட்டம், சீனா தானா 007 போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரம் ஷீலா திருமணம் | Child Artist Sheela marriage

தெலுங்கில் டாப் ஹீரோக்களான அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா போன்றவர்களுடன் நடித்த இவர், தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

2018 ம் ஆண்டு திரைக்கு வந்த கன்னடம் ஹைப்பர் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஷீலா தற்போது ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

சென்னையில் நடந்த அவர்கள் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருமணம் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஷீலா "இது எங்களுக்கு சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான நாள். மிகவும் சந்தோஷமாக உணர்கிறோம். எங்கள் புதிய வாழ்க்கையை துவங்குகிறோம்" என கூறியுள்ளார்.

Entertainment sub editor

Tags : Sheela