Ponniyin Selvan 2 : “மணிரத்னம் மீது பொறாமையா இருக்கு..” - பொன்னியின் செல்வன் பட விழாவில் கமல் உருக்கம்.
முகப்பு > சினிமா செய்திகள்அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். சுந்தர சோழர் கதாபாத்திரல் பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். சம்புவராயன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி, சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் அஷ்வினும், நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராமும் நடிக்கின்றனர். மதுராந்தக தேவராக ரகுமான், பாண்டிய ஆபத்துதவி தலைவனாக ரவிதாசன் கேரக்டரில் கிஷோர், பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு, அனிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு, சிறுவயது நந்தினியாக சாரா அர்ஜூன், வாசுகியாக வினோதினி, தம்புலா புத்த பிக்ஷூ கதாபாத்திரத்தில் கோபி கண்ணதாசன் நடிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை. நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.
இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசன், ரேவதி, குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இதில் பேசிய நடிகர் கமல், “உயிரே உறவே தமிழே. எந்த அரங்கம் சென்றாலும் இந்த வார்த்தை மாறிவிடாது. என் சந்தோஷ்த்துக்கு காரணம் கரகோஷம் மட்டுமல்ல. நான் நல்ல கலைஞர்களுடன் பணியாற்றியதும் தான். இயக்குநர் மணி ரத்னத்தை பார்த்து பொறாமை கொள்பவர்களின் நானும் ஒருவனாக உள்ளேன். நாயகனுக்கு முன்னாள் தொடங்கி எங்கள் இருவருக்குள் இருக்குமான பந்தம் இன்றளவும் தொடர்கிறது. நேற்று முன் தினம் துபாய்க்கு போனபோது அங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவை காண வாய்ப்பு அமைந்தது. அங்கே ஒரே நேரத்தில் 50 இசை கலைஞர்கள் ஒன்றாக இசை நிகழ்ச்சி நடத்தினர். மெய்சிலிர்த்து போனேன். இப்பேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைய வேண்டும்” என பேசியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- SivaKarthikeyan Talks About His Next Film With Kamal Haasan RKFI
- Vijayakanth Kamal Haasan Tweet About AjithKumar Father Demise
- Kamal Haasan Shared A Photo From Italy Via Della Spiga
- Kamal Haasan Tweet About RRR Naatu Naatu Oscar Award
- Actor Kamal Haasan Instagram Post About Simbhu 48th Movie
- Kamal Haasan Producing Silambarasan TR Next Movie STR 48
- Director Bharathi Raja Met Ulaga Nayagan Kamal Haasan
- Kamal Haasan Latest Instagram Post Goes Viral On Social Media
- Ulaga Nayagan Kamal Haasan Tweet About Valentines Day And Love
- Pa Ranjith Family With Kamal Haasan Viral Photos
- Kamal Haasan About His Political Enemy Speech
- Pa Ranjith Meets Kamal Haasan For Book Stall Launch Event
தொடர்புடைய இணைப்புகள்
- பொன்னியின் செல்வன் PART 2 TRAILER CUT WORKS🔥 #ponniyinselvan2 #shorts
- "டேய் இது முத்துப்பாண்டி கோட்டை 🤣"தரமான MIMICRY #shorts #shortsvideos
- ஆதவன் அண்ணா பிண்றீங்க 💥|செம்ம Mimicry💥 #shorts #shortsvideos
- "ஏணுங்கோ நல்லாருக்கீங்களா..?" கோவை தமிழில் பொளந்து கட்டிய வானதி ஸ்ரீனிவாசன் JOLLY பேட்டி
- 36 வருஷம் முன்னாடி🔥🔥 இவரு பிறக்கும்போதே KAMAL ரசிகனா தான் பிறந்து இருக்காரு..😮❤️ #LokeshKanagaraj
- LCU-ல Mankatha😲 Leo-வ Meet பண்ண Rolex💥 Stephen Devassy LIVE BGM Performance🔥
- நடிகர் மனோபாலா இரங்கல் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- நடிகர் யோகிபாபு ட்வீட் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- விஜயகாந்த் தரப்பில் வெளியான இரங்கல். | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- நடிகர் சீயான் விக்ரம் இரங்கல் பதிவு. | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- "சிரிக்க வைக்கும் சித்தனே. சிவனுடைய பக்தனே." - நடிகர் சாம்ஸ் தமது இரங்கல் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.! | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow