LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

"விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் FIRST LOOK போஸ்டர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

Also Read | PHOTOS: பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2.. படத்தில் இணைந்த பிரபல டாப் ஒளிப்பதிவாளர்! இவரா?

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. பின் பிப்ரவரி 24-ல் விக்ரம் கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியானது.

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் முதல் லுக் போஸ்டர்களும் வேளியிடப்பட்டுள்ளது. மாஸான கேங்ஸ்டர் தோற்றத்தில் ஹிருத்திக் ரோஷனும், கம்பீரமான போலீஸ் தோற்றத்தில் சயிப் அலிகானும் உள்ளனர்.

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

Also Read | "ஒரு கதை சொல்லட்டுமா சார்".. 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் கொல மாஸ் டீசர்! தனன நனனனா

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Vedha Movie First Look Posters Hrithik Roshan Saif Ali Khan

People looking for online information on Hrithik Roshan, Hrithik Roshan Vikram Vedha Movie First Look Posters, Saif Ali Khan, Vikram Vedha, Vikram Vedha Hindi Remake will find this news story useful.