LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

"ஒரு கதை சொல்லட்டுமா சார்".. 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் கொல மாஸ் டீசர்! தனன நனனனா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது.

Saif Ali Khan Hrithik Roshan Vikram Vedha Teaser Released

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போ? இயக்குனர் ஷங்கர் சொன்ன அதிரடி அப்டேட்!

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

Saif Ali Khan Hruthik Roshan Vikram Vedha Teaser Released

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.

Saif Ali Khan Hruthik Roshan Vikram Vedha Teaser Released

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Saif Ali Khan Hruthik Roshan Vikram Vedha Teaser Released

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது.

Saif Ali Khan Hruthik Roshan Vikram Vedha Teaser Released

தமிழில் இடம் பெற்ற காட்சிகளுடன் பல காட்சிகள் புதிதாக இந்திக்கு என்று படமாக்கப்பட்டுள்ளன. டீசரில் சயிப் அலிகான், ஹிருத்திக் ரோஷன், ராதிகா ஆப்தே ஆகியோர் தோன்றியுள்ளனர். ஹிருத்திக் ரோஷன் பேசும் வசனங்களும் அதிரடி சண்டை காட்சிகளும் டீசரில் முக்கிய அம்சமாக உள்ளன. தமிழில் புகழ் பெற்ற கருப்பு வெள்ளை பிண்ணனி இசை இந்த டீசரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்மை மற்றும் தீமை என்ற அடிப்படையில் டீஸர் அமைந்துள்ளது.

Saif Ali Khan Hruthik Roshan Vikram Vedha Teaser Released

Also Read | கோப்ரா படத்தின் மதுரை நிகழ்ச்சி.. இயக்குனர் பாலா பற்றி பேசிய சியான் விக்ரம்! முழு தகவல்

"ஒரு கதை சொல்லட்டுமா சார்".. 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் கொல மாஸ் டீசர்! தனன நனனனா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Saif Ali Khan Hrithik Roshan Vikram Vedha Teaser Released

People looking for online information on Hrithik Roshan, Saif Ali Khan, Vikram Vedha teaser will find this news story useful.