Battery
www.garudabazaar.com

"நான் ஏதோ பெருசா சாதிச்சுட்டேன்னு சொல்றாங்க".. பிரபுதேவா பட சீனையே ரீல்ஸ் செய்த வரலஷ்மி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

prabhudeva movie scene Varalaxmi reels viral video

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

prabhudeva movie scene Varalaxmi reels viral video

இந்த பட விழாவில் பேசிய பிரபுதேவா, “நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிபடும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.” என்று பேசி இருந்தார்.

இதேபோல் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், “நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரை சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். நடிகர் ஆர்யாதான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார்.

prabhudeva movie scene Varalaxmi reels viral video

மேலும் இந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம். பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று  பார்ப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது” என்று பேசி இருந்தார்.

 

இந்த விழாவை அடுத்து, “நான் ஏதோ பெருசா சாதிச்சுட்டேன்னு சொல்றாங்க.. ஆனா எல்லாத்தையும் பண்ணது இவர் தான்”, என வரலஷ்மி, பிரபுதேவாவை பார்த்து சொல்லும் வானத்தை போல வசனத்தின் ரீல்ஸை தற்போது வரலஷ்மி பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வடிவேலுவுடன் இணைந்து நடிகர் பிரபுதேவா, ‘சிங் இன் தி ரெயின்’ (வடிவேலு - பிரபுதேவாவின் வைரல் காமெடி) காமெடியை ரீல்ஸாக பதிவிட்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

prabhudeva movie scene Varalaxmi reels viral video

People looking for online information on Poikaal Kuthirai, Prabhudeva, Varalaxmi Sarathkumar will find this news story useful.