மாஸ்டர் டைரக்டர் : பேங்க் ஊழியர் To தளபதி விஜய்யின் இயக்குனர்... யார் இந்த லோகேஷ் கனகராஜ்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர்.

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரலாறு How Master Film Director Lokesh Kanagraj Reached Heights

இந்நிலையில் இன்று பலரது மனதில் இருக்கும் ஒரு கேள்வி. யார் இந்த லோகேஷ்  கனகராஜ்? வந்ததுமே இப்படி ஹெவியா பெர்பார்ம் பண்ணுகிறாரே என்கிற சந்தேகம் தான். ஆம் மூன்றே மூன்று படங்கள்.  மாநகரம், கைதி, அடுத்தது மாஸ்டர். ஆனால் இவர் எட்டியிருக்கும் உயரங்கள் சொல்ல முடியாதவை.

லோகேஷ் கனகராஜ் 1986 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் முதலில் வேலை செய்தது ஒரு வங்கியில் தான். அப்படி இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது  அவரது அலுவலகத்தில்  நடந்த குறும்பட போட்டியில் இவர் கலந்துகொள்ள, இவரது படம் முதல் பரிசை தட்டிச் சென்றது.

அந்த ஊக்கத்தில் தான் அவருக்கு சினிமா ஆசை எட்டி பார்த்துள்ளது. வேலை செய்து கொண்டே வார இறுதிகளில் ஒரு குறும்படம் எடுத்தார். அப்படி எடுக்கப்பட்ட படம் தான் 'களம்'. இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்க, இவரது குறும்பட நண்பர்கள் உதவியுடன் முழு நேர சினிமா வேளையில் இறங்கினார். இதனிடையே அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். அப்போது அவர் சிறு சிறு அவமானங்களை சந்தித்ததாகவும் ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதே தனது வெற்றிக்கு காரணம் என்றும் கூறுகிறார்.

இவர் தீவிர உலகநாயகன் ரசிகராம். இவருக்கு பிடித்த படங்கள் சத்யா மற்றும் விருமாண்டி. கமல் ஹாசனுக்கு அசிஸ்டென்ட் ஆக வேலை செய்ய வேண்டும் என்று கூட ஆசைப்பட்டாராம்.

இவரது முதல் திரைப்படமான ' மாநகரம்' படம் நடிகர்கள் ஸ்ரீ, சந்தீப் மற்றும் ரெஜினா ஆகியோரது வெளியாகி வெகுவாக பாராட்டப்பட்டது. உடனே அவசரத்தில் அடுத்த படத்தை இயக்காமல், பொறுமையாக ஒரு வருட டைம் எடுத்து தனது அடுத்த கதையை தயார் செய்தார் லோகேஷ்.

அடுத்து ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவானது 'கைதி'. இரண்டாவது படத்திலேயே ஒரு மாஸ் ஹீரோ. ஆனால் சுழன்று அடிக்கும் கில்லியாக அந்தப் படத்திலும் வெற்றி கண்டார் இவர். காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒத்திக் கொள்ளும் வகையில் சிறப்பாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் இந்த கைதியை கொண்டாடி தீர்த்தனர்.

அடுத்து என்ன பண்ணப் போகிறார் என்று காத்திருந்தால் சரவெடியாக வந்தது அந்தச் செய்தி. லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை இயக்க போகிறார் என்று. ரசிகர்கள் துள்ளி குதித்தனர். ஆனால் இது எப்படி நடக்க போகிறது என்று காத்திருக்கையில், அத்தனை ஆயிரம் கலைஞர்களையும் ஒருசேர இயக்கி வெறும் 129 நாட்களில் ஷூட்டிங்கை முடித்திருக்கிறார்.

பொறுமையும், தெளிவும் இவரது சொத்துக்கள். இன்று தளபதி ரசிகர்கள் லோகேஷை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். ஆம் எந்த தொழிலாக இருந்தாலும் சரி, அதில் சின்சியாரிட்டி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு லோகேஷ் கனகராஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மாஸ்டர் டைரக்டர் : பேங்க் ஊழியர் TO தளபதி விஜய்யின் இயக்குனர்... யார் இந்த லோகேஷ் கனகராஜ்..? வீடியோ

Entertainment sub editor