''எனக்கும் மனைவிக்கும் கொரோனா வந்துருக்கு, அழுது ஒரு ...'' பிரபல ஹாலிவுட் நடிகர் உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மேலும் கொரோனா அச்சம் காரணமாக திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் படப்பிடிப்பும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும் தனது மனைவி ரீட்டாவிற்கும் கொரோனா பாதித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்தார். தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுகுறித்து மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது தற்போதைய பதிவில், எங்களை நன்றாக கவனித்துக்கொண்ட அனைவருக்கும் நானும் எனது மனைவி ரீட்டாவும் நன்றி சொல்கிறோம். கொரோனா எங்கள் மூலம் வேறு யாருக்கும் பரவக் கூடாது என்பதற்காக நாங்கள் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறோம்.
நிறைய பேர் சீரியஸான நிலையில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுது தான் துவக்க நிலையில் இருக்கிறோம். எக்ஸ்பர்ட்களின் அறிவுரையின் படி நடந்து கொள்ளவேண்டும். நம்மை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
— Tom Hanks (@tomhanks) March 13, 2020