சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள மக்களை பயமுறுத்தி வரும் கொரோனா வைரசால் இன்று வரை அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் கொரோனா தாக்குதல் மெல்ல மெல்ல பரவ தொடங்கியுள்ளது. அரசு இதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நேரத்தில் மக்கள் மத்தியில் நடிகர் அரவிந்த் சாமி தனது டிவிட்டரில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இதில் அவர் 'நாம் உலகளாவிய ஒரு கொடிய தொற்று நோயை எதிர்கொள்வதால் அனைவரும் பாதுகாப்போடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், உடல் நலம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள், உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.
நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும். அது நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அனைவருக்கும் பாதுகாப்பாக இருங்கள்' என்று அந்த பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
COVID-19. My thoughts on a few things that need to be done.. pic.twitter.com/Wc1cIdc06U
— arvind swami (@thearvindswami) March 13, 2020