ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு ட்ரெய்லர் - தமிழில் ஒரு ஸ்பேர்ம் டோனர் கதை! செம லவ்.. செம ஃபன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள தாராள பிரபு படத்தின் செம ஜாலியான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு ட்ரெய்லர் | harish kalyan's dharala prabhu trailer is out

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த பியார் ப்ரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் தற்போது தாராள பிரபு எனும் படத்தில் நடித்துள்ளார். தன்யா ஹோப், விவேக் ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிருஷ்ணா மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் தாராள பிரபு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்காக ஸ்பேர்ம் டொனேட் செய்யும் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாணம் நடித்திருக்கிறார். அதனால் வரும் கலாட்டாவில் தொடங்கி, காதலில் ஏற்படும் பிரச்சனை என ட்ரெய்லர் செம ஃபன் மேட்டர்களுடன் வெளியாகியிருக்கிறது. மார்ச் மாதம் இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு ட்ரெய்லர் - தமிழில் ஒரு ஸ்பேர்ம் டோனர் கதை! செம லவ்.. செம ஃபன்! வீடியோ

Entertainment sub editor