தலைவர் 168 படத்தின் டைட்டில் வெளியானது - இது நம்ம 'அண்ணாத்த'-யோட கோட்டை! வேறலெவர் வீடியோ இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினி நடித்து வரும் தலைவர் 168-வது படத்தில் இருந்து முக்கியமான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ரஜினியில் தலைவர் 168 டைட்டில் அண்ணாத்த | rajini's thalaivar 168 title is annaththe

ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் தலைவர் 168. சிறுத்தை சிவா இயக்கும் இத்திரைப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தரப்பில், தலைவர் 168 படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு அண்ணாத்த என படக்குழு பெயரிட்டுள்ளது. டைட்டிலுடன் சேர்ந்து ஒரு வீடியோவும் சன் பிக்சர்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இமான் இசையுடன் வரும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Entertainment sub editor