'தனுசு ராசி நேயர்களே' படத்துக்கு பிறகு, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தாராள பிரபு'. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'விக்கி டோனர்' பட தமிழ் ரீமேக்கான இதனை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்துக்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, Madly Blues, Oorka - the band, ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின் உள்ளிட்டோர் இசையமைக்கின்றனர். இந்த படத்தின் பின்னணி இசையை பரத் சங்கர் மேற்கொள்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் - விவேக் கூட்டணியில் 'தாராள பிரபு' டீஸர் இதோ வீடியோ
Tags : Dharala Prabhu, Harish Kalyan, Vivekh, Tanya Hope