’ஹரிஷ் கல்யாணுக்கு இத்தனை குழந்தைகளா!!!’ – ‘தாராள பிரபு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 10, 2020 07:40 PM
’இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படத்துக்கு ’தாராளப்பிரபு’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் இவருடன் நடிகை தான்யா இணைந்து நடித்துள்ளார். கிருஷ்ண மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் எடிட்டிங் செய்கிறார்.
ஸ்க்ரீன் சீன் மீடியா எண்ட்ர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு சுப்பு மற்றும் சுதர்சன் நரசிம்மன் கதை எழுதி உள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அனிருத் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரு நகைச்சுவை கலந்த கதைக்களமாக தாராளப்பிரபு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் தற்போது, தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘பெல்லி சூப்லு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரியா பவானிஷங்கருடன் இணைந்து நடித்து வருகிறார்.