Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

விஷால் நடிக்கும் "மார்க் ஆண்டனி".. வித்தியாசமான கேங்ஸ்டர் லுக்கில் S.J. சூர்யா! செம்ம போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின்  எஸ். ஜே. சூர்யா லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

Also Read | விஜயதசமி வாழ்த்துடன் தந்தை ரஜினிகாந்த்தின் புது லுக் Photo-வை வெளியிட்ட ஐஸ்வர்யா ..

விஷாலின் 33வது படமாக உருவாகும்   'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். 

விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. 

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ரீது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் & எஸ்.ஜே. சூர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர்.

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

மார்க் ஆண்டனி படத்தின் முதல் லுக் போஸ்டர் நடிகர் விஷாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு  5 மொழிகளில் போஸ்டர் வெளியிடப்பட்டது. மீசை மற்றும் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் விஷால் முதல் லுக் போஸ்டரில் தோன்றி இருந்தார்.

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

இந்நிலையில் விஜய தசமியை முன்னிட்டு படக்குழு எஸ்.ஜே. சூர்யாவின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தாடி இல்லாமல் கிடா மீசையுடன் கையில் துப்பாக்கி ஏந்தி 80களில் பிரபலமான பெல்ஸ் பேன்ட் அணிந்து எஸ் ஜே சூர்யா தோன்றியுள்ளார். இந்த போஸ்டரை டிசைனர் கபிலன் வடிவமைத்துள்ளார். ஜாக்கி பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார்.

Also Read | 'PS1' படத்திற்காக முழு IMAX தியேட்டரையும் புக் செய்த கமல்? கூட இவங்க வேறயா? செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah character look as Jackie Pandian from Mark Antony

People looking for online information on Mark Antony, Mark Antony Movie, Sj suryah, Vishal will find this news story useful.