IRAVIN NIZHAL
www.garudabazaar.com

VIDEO: அருள் நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் மிரட்டல் டிரெய்லர்.. வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்.

Here is the trailer of Arulnithi starrer Deja Vu

Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் வெளியிட்ட புதிய அப்டேட்! வைரல் PHOTO

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Here is the trailer of Arulnithi starrer Deja Vu

இன்று இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். டிரைலரை கண்டு ரசித்து படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வின் போது தேஜாவு படத்தின் நாயகன் அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Here is the trailer of Arulnithi starrer Deja Vu

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

Here is the trailer of Arulnithi starrer Deja Vu

வெளியான சில நிமிடங்களில் தேஜாவு ட்ரைலர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஜுலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?

VIDEO: அருள் நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் மிரட்டல் டிரெய்லர்.. வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Here is the trailer of Arulnithi starrer Deja Vu

People looking for online information on Arulnithi, Arulnithi Deja Vu Movie, Deja Vu Movie Trailer will find this news story useful.