இந்த அதர்வா படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பூமராங்' படத்துக்கு பிறகு அதர்வா நடித்துள்ள படம் '100'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். ஔரா சினிமாஸ் சார்பாக இந்த படத்தை காவியா வேணுகோபால் தயாரித்துள்ளார்.

Atharva and Hansika Motwani's 100 release date is May 3

இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.  அதன் ஒரு பகுதியாக இந்த படத்தில் யோகிபாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது அதன் படி இந்த படம் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  அதனைத் தொடர்ந்து யோகிபாபு வைத்து சாம் ஆண்டன் 'கூர்கா' என்ற படத்தை இயக்கிவருகிறார்.