சித்தார்த் , ஜீவி பிரகாஷ் இணைந்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 02, 2019 11:04 AM
பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இயக்கியிருக்கும் படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பகா ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இப்படம் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இன்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு படக்குழுவினர் மாற்றி உள்ளனர் என்பது தான். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : GV Prakash, Siddharth, Sasi, Sivappu Manjal Pach